தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6008

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது.

 அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்

(பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் (ஊரில்) நாங்கள்விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம்.

நபி(ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்க குணமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள். அவர்களை (கடமையானவற்றைச் செய்யுமாறு) பணியுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு (தொழுகை அறிவிப்புச்) சொல்லட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள்.32

Book : 78

(புகாரி: 6008)

بَابُ رَحْمَةِ النَّاسِ وَالبَهَائِمِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ

أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا اشْتَقْنَا أَهْلَنَا، وَسَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا، فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَفِيقًا رَحِيمًا، فَقَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.