தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6043

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மினாவில் (தங்கியிருந்தபோது ‘துல்ஹஜ்’ பத்தாம் நாள் உரையாற்றுகையில்) ‘மக்களே! இது என்ன நாள் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித நாள்’ என்று கூறினார்கள்.

(பிறகு) ‘இது எந்த நகரம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித நகரம்’ என்று கூறினார்கள். (பிறகு) ‘இது என்ன மாதம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘இது புனித மாதம்’ என்று கூறிவிட்டு, ‘நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்’ என்று கூறினார்கள்.57

Book :78

(புகாரி: 6043)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «بَلَدٌ حَرَامٌ، أَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «شَهْرٌ حَرَامٌ» قَالَ: «فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.