பாடம் : 55 ஒருவர் தம் சகோதரர் குறித்து தாம் அறிந்த வற்றைக் கூறிப் புகழ்வது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (யூத அறிஞராயிருந்து முஸ்லிமான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர பூமியின் மீது நடக்கின்ற வேறெவரைக் குறித்தும் ‘இவர் சொர்க்கவாசி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டதில்லை.79
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழங்கி குறித்து (ஆடையைப் பெருமையுடன் தரையில் படும்படி இழுத்துச் செல்கிறவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று) குறிப்பிட்டபோது அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று (இடுப்பில் நிற்காமல் கீழே) விழுந்துவிடுகிறதே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (தற்பெருமையுடன் கீழங்கியைத் தொங்க விடும்) அவர்களில் உள்ளவர் அல்லர்’ என்று கூறினார்கள்.80
பகுதி 56
‘நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் (உங்களை) ஏவுகிறான். அன்றியும் மானக்கேடான செயல்கள், பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைச் செய்வதற்குத் தடை விதிக்கிறான். நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 16:90 வது) இறைவசனம்.
‘(மனிதர்களே!) உங்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் உங்களுக்கே கேடாக முடியும்’ எனும் (திருக்குர்ஆன் 10:23 வது) இறைவசனம்.
‘அதன்பின்னர் அவனுக்குக் கொடுமை இழைக்கப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவுவான்’ எனும் (திருக்குர்ஆன் 22:60 வது) இறைவசனம்.
மேலும், முஸ்லிமுக்கெதிராகவோ இறைமறுப்பாளருக்கெதிராகவோ வன்மத்தைத் தூண்டாமல் இருப்பது.
Book : 78
(புகாரி: 6062)بَابُ مَنْ أَثْنَى عَلَى أَخِيهِ بِمَا يَعْلَمُ
وَقَالَ سَعْدٌ: مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِأَحَدٍ يَمْشِي عَلَى الأَرْضِ: «إِنَّهُ مِنْ أَهْلِ الجَنَّةِ إِلَّا لِعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ»
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ ذَكَرَ فِي الإِزَارِ مَا ذَكَرَ، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ إِزَارِي يَسْقُطُ مِنْ أَحَدِ شِقَّيْهِ؟ قَالَ: «إِنَّكَ لَسْتَ مِنْهُمْ»
சமீப விமர்சனங்கள்