தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6078

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 (இறை நெறிக்கு) மாறு செய்பவருடன் பேசாமல் இருக்கலாம்.88 நான் (மற்றும் இரு நண்பர்கள் தக்கக் காரணமின்றி தபூக் போரில்) நபி (ஸல்) அவர் களுடன் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிய போது, ‘எங்களுடன் பேச வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள்’ என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு) ஐம்பது நாட்கள் (பேசாமலிருந்தார்கள்) என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.89

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘உன்னுடைய கோபத்தையும் உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்’ என்று கூறினார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்). நான் தங்களின் பெயரைத் தான் கோபித்துக் கொள்வேன் (தங்களின் மீதுன்று)’ என்று கூறினேன்.99

Book : 78

(புகாரி: 6078)

بَابُ مَا يَجُوزُ مِنَ الهِجْرَانِ لِمَنْ عَصَى

وَقَالَ كَعْبٌ، حِينَ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا، وَذَكَرَ خَمْسِينَ لَيْلَةً»

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنِّي لَأَعْرِفُ غَضَبَكِ وَرِضَاكِ» قَالَتْ: قُلْتُ: وَكَيْفَ تَعْرِفُ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” إِنَّكِ إِذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ: بَلَى وَرَبِّ مُحَمَّدٍ، وَإِذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ: لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ” قَالَتْ: قُلْتُ: أَجَلْ، لَسْتُ أُهَاجِرُ إِلَّا اسْمَكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.