தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6081

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 (தம்மைச் சந்திக்கவரும்) தூதுக் குழுவினர் களுக்காக ஒருவர் தம்மை (ஆடையணிகலன் களால்) அலங்கரித்துக்கொள்வது.

 யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அல் ஹள்ரமீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் என்னிடம், ‘அல்இஸ்தப்ரக்’ என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நான், ‘கெட்டியான முரட்டுப் பட்டு’ என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள், (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்; (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் ஒருவரின் மீது கெட்டியான பட்டு அங்கி ஒன்றைக் கண்டார்கள். அதை (அவரிடமிருந்து வாங்கி) நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் விலைக்கு வாங்கி மக்களின் தூதுக் குழு தங்களிடம் வரும்பொழுது இதைத் தாங்கள் அணிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(மறுமைப்) பேறற்ற (ஆட)வர்களே (இது போன்ற) பட்டை (இம்மையில்) அணிந்துகொள்வார்கள்’ என்றார்கள்.

இது நடந்து சில நாள்கள் கழிந்த பிறகு (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு பட்டு அங்கியை கொடுத்தனுப்பினார்கள். உடனே அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இதை எனக்குத் தாங்கள் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். (ஆனால்) இது போன்ற (பட்டு அங்கி) விஷயத்தில் தாங்கள் வேறு விதமாகக் கூறினீர்களே?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(இதை விற்று) இதன் மூலம் (வருவாயாகக் கிடைக்கும்) செல்வத்தை நீங்கள் அடைந்துகொள்ளும் பொருட்டே இதை உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்’ என்றார்கள்.

இந்த நபி மொழியின் காரணமாகவே இப்னு உமர்(ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள்.

Book : 78

(புகாரி: 6081)

بَابُ مَنْ تَجَمَّلَ لِلْوُفُودِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ

قَالَ لِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ: – مَا الإِسْتَبْرَقُ؟ قُلْتُ: مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ، وَخَشُنَ مِنْهُ – قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ: رَأَى عُمَرُ عَلَى رَجُلٍ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ، فَأَتَى بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اشْتَرِ هَذِهِ، فَالْبَسْهَا لِوَفْدِ النَّاسِ إِذَا قَدِمُوا عَلَيْكَ. فَقَالَ: «إِنَّمَا يَلْبَسُ الحَرِيرَ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَمَضَى مِنْ ذَلِكَ مَا مَضَى، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ إِلَيْهِ بِحُلَّةٍ، فَأَتَى بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: بَعَثْتَ إِلَيَّ بِهَذِهِ، وَقَدْ قُلْتَ فِي مِثْلِهَا مَا قُلْتَ؟ قَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتُصِيبَ بِهَا مَالًا» فَكَانَ ابْنُ عُمَرَ، يَكْرَهُ العَلَمَ فِي الثَّوْبِ لِهَذَا الحَدِيثِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.