தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6097

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 நன்னடத்தை

 ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அசைவு(நடை), தோற்றம் (உடை), நடத்தை(பாவனை) ஆகிய அனைத்திலும் மக்களிலேயே மிகவும் ஒப்பானவர். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் தாம். (இப்னு உம்மி அப்த் எனப்படும் அவர்கள்) தம் இல்லத்திலிருந்து புறப்பட்டது முதல் வீடு திரும்பும் வரை (அவ்வாறு இருப்பார்கள்) தம் வீட்டாருடன் தனியாக இருக்கும்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

(அறிவிப்பாளர்) இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நான் அபூ உசாமா(ரஹ்) அவர்களிடம் ‘இந்த ஹதீஸை அஃமஷ்(ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்கள்?’ என்று கேட்டேன். (அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.)

Book : 78

(புகாரி: 6097)

بَابٌ فِي الهَدْيِ الصَّالِحِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمُ الأَعْمَشُ: سَمِعْتُ شَقِيقًا، قَالَ: سَمِعْتُ حُذَيْفَةَ، يَقُولُ

«إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلًّا وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَابْنُ أُمِّ عَبْدٍ، مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يَرْجِعَ إِلَيْهِ، لاَ نَدْرِي مَا يَصْنَعُ فِي أَهْلِهِ إِذَا خَلاَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.