தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6127

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அஸ்ரக் இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாங்கள் (ஈரானிலுள்ள) ‘அஹ்வாஸ்’ எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங் கரையில் இருந்து கொண்டிருந்தோம். அதில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. அப்போது அபூ பர்ஸா அல் அஸ்லமீ(ரலி) அவர்கள் குதிரை யொன்றில் வந்து (இறங்கி) அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டத் தொழுதார்கள். அப்போது அந்தக் குதிரை நடக்கலாயிற்று. உடனே அபூ பர்ஸா(ரலி) அவர்கள் தங்களின் தொழுகையைவிட்டுவிட்டு குதிரையைப் பின்தொடர்ந்து சென்று, அதை அடைத்து பிடித்தார்கள். பிறகு வந்து தம் தொழுகையை நிறைவு செய்தார்கள்.

எங்களிடையே (மாறுபட்ட) சிந்தனை கொண்ட (காரிஜிய்யாக்களில்) ஒருவர் இருந்தார். அவர், ‘ஒரு குதிரைக்காகத் தம் தொழுகையையேவிட்டுவிட்ட இந்த முதியவரைப் பாருங்கள்’ என்று கூறியவாறு (சபித்தவராக) முன்னோக்கி வந்தார். உடனே அபூ பர்ஸா(ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பிரிந்ததிலிருந்து என்னுடன் யாரும் (இவ்வளவு) கடுமையாக நடந்து கொண்டதில்லை. என்னுடைய இல்லம் தொலைவில் உள்ளது. நான் (என்னுடைய குதிரையை)விட்டுவிட்டு தொழுது கொண்டிருந்தால் (அது எங்காவது போய்விடும். பிறகு) நான் என்விட்டாரிடம் இரவு வரை போய்ச் சேர முடியாது’ என்று கூறினார்கள். மேலும், தாம் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்ததாகவும் அப்போது நபி(ஸல்) அவர்கள் (எதிலும்) எளிதாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

Book :78

(புகாரி: 6127)

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الأَزْرَقِ بْنِ قَيْسٍ، قَالَ

كُنَّا عَلَى شَاطِئِ نَهَرٍ بِالأَهْوَازِ، قَدْ نَضَبَ عَنْهُ المَاءُ، فَجَاءَ أَبُو بَرْزَةَ الأَسْلَمِيُّ عَلَى فَرَسٍ، فَصَلَّى وَخَلَّى فَرَسَهُ، فَانْطَلَقَتِ الفَرَسُ، فَتَرَكَ صَلاَتَهُ وَتَبِعَهَا حَتَّى أَدْرَكَهَا، فَأَخَذَهَا ثُمَّ جَاءَ فَقَضَى صَلاَتَهُ، وَفِينَا رَجُلٌ لَهُ رَأْيٌ، فَأَقْبَلَ يَقُولُ: انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ، تَرَكَ صَلاَتَهُ مِنْ أَجْلِ فَرَسٍ، فَأَقْبَلَ فَقَالَ: مَا عَنَّفَنِي أَحَدٌ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: إِنَّ مَنْزِلِي مُتَرَاخٍ، فَلَوْ صَلَّيْتُ وَتَرَكْتُهُ، لَمْ آتِ أَهْلِي إِلَى اللَّيْلِ، وَذَكَرَ أَنَّهُ «قَدْ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى مِنْ تَيْسِيرِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.