தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6129

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81 மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்திவிடாதே.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?’ என்று கூடக் கேட்பார்கள்.

Book : 78

(புகாரி: 6129)

بَابُ الِانْبِسَاطِ إِلَى النَّاسِ

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: «خَالِطِ النَّاسَ وَدِينَكَ لاَ تَكْلِمَنَّهُ وَالدُّعَابَةِ مَعَ الأَهْلِ»

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا، حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.