தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6139

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 86 விருந்தினருக்காக உணவு தயாரிப்பதும் அவர் களுக்காகச் சிரமமெடுத்துக்கொள்வதும்.

 அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான்(ரலி) அவர்கள் அபுதர்தா(ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா(ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்முத் தர்தா, ‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்’ என்றார். பிறகு, அபுத்தர்தா(ரலி) அவர்கள் வந்து சல்மான்(ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு ‘சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்’ என்றார்கள். அபுத்தர்தா அதற்கு சல்மான்(ரலி) அவர்கள், ‘நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்’ என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா(ரலி)

சாப்பிட்டார்கள். இரவு நேரம் வந்ததும் அபுத்தர்தா(ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள்.

அப்போது சல்மான்(ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள். எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான்(ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள்.

இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான்(ரலி) அவர்கள் ‘இப்போது எழுங்கள்’ என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள் அபுத்தர்தா(ரலி) அவர்களிடம், ‘உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்’ என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘சல்மான் உண்மையே சொன்னார்’ என்றார்கள்.

அபூ ஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ(ரலி) அவர்களுக்கு ‘வஹ்புல் கைர்’ என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

Book : 78

(புகாரி: 6139)

بَابُ صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُوالدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُوالدَّرْدَاءِ، فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُوالدَّرْدَاءِ يَقُومُ، فَقَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ، فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ آخِرُ اللَّيْلِ، قَالَ سَلْمَانُ: قُمِ الآنَ، قَالَ: فَصَلَّيَا، فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ [ص:33] عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ» أَبُو جُحَيْفَةَ وَهْبٌ السُّوَائِيُّ يُقَالُ: وَهْبُ الخَيْرِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.