தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6140

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87 விருந்தினரிடம் கோபத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துவது வெறுக்கப்பட்டதாகும்.

 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (மூன்று பேர் கொண்ட) ஒரு குழுவினர் விருந்தினராக வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் என்னிடம், ‘உன் விருந்திரைக் கவனித்துக் கொள். நான் நபி(ஸல்) அவர்களிடம் செல்கிறேன். நான் வருவதற்கு முன் அவகளை விருந்துண்ணச் செய்துவிடு’ என்று கூறினார்கள். நான் சென்று, எங்களிடமிருந்த உணவை அவர்களிடம் கொண்டு வந்து, ‘உண்ணுங்கள்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘வீட்டுக்காரர் எங்கே?’ என்று கேட்டனர். நான் அவர்களிடம், ‘நீங்கள் உண்ணுங்கள்’ என்றேன். அவர்கள் ‘வீட்டுக்காரர் வரும் வரை நாங்கள் சாப்பிட மாட்டோம்’ என்று கூறினர்.

அதற்கு ‘நான் அளிக்கும் விருந்தை ஏற்று உண்ணுங்கள். ஏனெனில், நீங்கள் உண்ணாத நிலையில் என் தந்தை வந்துவிட்டால் அவர்கள் நம்மைக் கண்டிப்பார்கள்’ என்றேன். ஆனால், அவர்கள் (சாப்பிட) மறுத்துவிட்டார்கள். மேலும், அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்தால் என் மீது கோபப்படுவார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் தந்தை வந்தபோது நான் அவர்களிடமிருந்து விலகி (ஒளிந்து) கொண்டேன். அவர்கள் ‘விருந்தாளிகளுக்கு) என்ன செய்தீர்கள்?’ என (வீட்டாரிடம்) கேட்டார்கள். அவர்கள் நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது என் தந்தை, ‘அப்துர் ரஹ்மானே!’ என்று கூப்பிட்டார்கள். நான் (பயத்தினால் பதிலளிக்காமல்) மெளனமாயிருந்தேன். பிறகு ‘அப்துர் ரஹ்மானே!’ என்று (மீண்டும்) கூப்பிட்டார்கள். நான் (அப்போதும்) மெளனமாயிருந்தேன். பிறகு (மூன்றாம் முறை) ‘அறிவில்லாதவனே! உன் (இறைவன்) மீது சத்தியம் செய்கிறேன். என் குரல் உனக்குக் கேட்குமானால் நீ வந்ததாக வேண்டும்’ என்றார்கள். உடனே நான் வெளியே வந்தேன். ‘தங்கள் விருந்தினரிடமே கேளுங்கள்’ என்றேன். அப்போது விருந்தினர், ‘அவர் எங்களிடம் உணவைக் கொண்டு வந்தார். (நாங்கள் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை)’ என்றனர். என் தந்தை, ‘என்னைத்தானே எதிர்பார்த்தீர்கள்? அல்லாஹ்வின் மீதானையாக! (இவ்வளவு தாமதத்திற்குக் காரணமாம்விட்ட) நான் இன்றிரவு சாப்பிடப் போவதில்லை’ என்றார்கள். மற்றவர்களோ ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சாப்பிடாத வரை நாங்களும் சாப்பிட மாட்டோம்’ என்று கூறினர். அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இன்றிரவைப் போன்று ஒரு தர்மசங்கடமான இரவை நான் கண்டதில்லை’ என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு என்ன கேடு’ எங்கள் விருந்தை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்? (அப்துர் ரஹ்மானே!) உன் உணவைக் கொண்டு வா!’ என்றார்கள். நான் கொண்டு வந்தேன். அதில் என் தந்தை தம் கையை வைத்து ‘அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம்) (நான் உண்ண மாட்டேன் எனச் சத்தியம் செய்த) முதல் நிலை ஷைத்தானினால் விளைந்தது’ என்றார்கள். பிறகு அவர்களும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.

Book : 78

(புகாரி: 6140)

بَابُ مَا يُكْرَهُ مِنَ الغَضَبِ وَالجَزَعِ عِنْدَ الضَّيْفِ

حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ الجُرَيْرِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ أَبَا بَكْرٍ تَضَيَّفَ رَهْطًا، فَقَالَ لِعَبْدِ الرَّحْمَنِ: «دُونَكَ أَضْيَافَكَ، فَإِنِّي مُنْطَلِقٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَافْرُغْ مِنْ قِرَاهُمْ قَبْلَ أَنْ أَجِيءَ»، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَاهُمْ بِمَا عِنْدَهُ، فَقَالَ: اطْعَمُوا، فَقَالُوا: أَيْنَ رَبُّ مَنْزِلِنَا، قَالَ: اطْعَمُوا، قَالُوا: مَا نَحْنُ بِآكِلِينَ حَتَّى يَجِيءَ رَبُّ مَنْزِلِنَا، قَالَ: اقْبَلُوا عَنَّا قِرَاكُمْ، فَإِنَّهُ إِنْ جَاءَ وَلَمْ تَطْعَمُوا لَنَلْقَيَنَّ مِنْهُ، فَأَبَوْا، فَعَرَفْتُ أَنَّهُ يَجِدُ عَلَيَّ، فَلَمَّا جَاءَ تَنَحَّيْتُ عَنْهُ، فَقَالَ: مَا صَنَعْتُمْ، فَأَخْبَرُوهُ، فَقَالَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ»، فَسَكَتُّ، ثُمَّ قَالَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ»، فَسَكَتُّ، فَقَالَ: «يَا غُنْثَرُ، أَقْسَمْتُ عَلَيْكَ إِنْ كُنْتَ تَسْمَعُ صَوْتِي لَمَّا جِئْتَ»، فَخَرَجْتُ، فَقُلْتُ: سَلْ أَضْيَافَكَ، فَقَالُوا: صَدَقَ، أَتَانَا بِهِ، قَالَ: «فَإِنَّمَا انْتَظَرْتُمُونِي، وَاللَّهِ لاَ أَطْعَمُهُ اللَّيْلَةَ»، فَقَالَ الآخَرُونَ: وَاللَّهِ لاَ نَطْعَمُهُ حَتَّى تَطْعَمَهُ، قَالَ: «لَمْ أَرَ فِي الشَّرِّ كَاللَّيْلَةِ، وَيْلَكُمْ، مَا أَنْتُمْ؟ لِمَ لاَ تَقْبَلُونَ عَنَّا قِرَاكُمْ؟ هَاتِ طَعَامَكَ»، فَجَاءَهُ، فَوَضَعَ يَدَهُ فَقَالَ: «بِاسْمِ اللَّهِ، الأُولَى لِلشَّيْطَانِ، فَأَكَلَ وَأَكَلُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.