அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தம் துணைவியர் சிலரிடம் சென்றார்கள். (அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் அத்துணைவியருடன் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகவோட்டியிடம்) ‘உமக்கு நாசம்தான். அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!’ என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் (தம்முடன் இருந்த இராக்கியரிடம்) கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை கூறினார்கள். உங்களில் ஒருவர் அதைச் சொல்லியிருந்தால் (இங்கிதம் தெரியாத நீங்கள்) அதற்காக அவரை(க் கேலி செய்து) விளையாடியிருப்பீர்கள். ‘நிதானமாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே’ என்பது தான் அந்த வார்த்தை.
Book :78
(புகாரி: 6149)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعْضِ نِسَائِهِ وَمَعَهُنَّ أُمُّ سُلَيْمٍ، فَقَالَ: «وَيْحَكَ يَا أَنْجَشَةُ، رُوَيْدَكَ سَوْقًا بِالقَوَارِيرِ» قَالَ أَبُو قِلاَبَةَ: فَتَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَلِمَةٍ، لَوْ تَكَلَّمَ بِهَا بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ، قَوْلُهُ: «سَوْقَكَ بِالقَوَارِيرِ»
சமீப விமர்சனங்கள்