ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியரான) ஸஃபிய்யா(ரலி) அவர்கள் தங்களின் கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாய்’ என்று கூறினார்கள். பிறகு, ‘நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா? என்று கேட்டார்கள். ஸஃபிய்யா(ரலி) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். ‘அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகிவிட்டது) நீ புறப்படு’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
Book :78
(புகாரி: 6157)حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْفِرَ، فَرَأَى صَفِيَّةَ عَلَى بَابِ خِبَائِهَا كَئِيبَةً حَزِينَةً، لِأَنَّهَا حَاضَتْ، فَقَالَ: «عَقْرَى حَلْقَى – لُغَةٌ لِقُرَيْشٍ – إِنَّكِ لَحَابِسَتُنَا» ثُمَّ قَالَ: «أَكُنْتِ أَفَضْتِ يَوْمَ النَّحْرِ» – يَعْنِي الطَّوَافَ – قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَانْفِرِي إِذًا»
சமீப விமர்சனங்கள்