தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6158

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 94 ‘அவ்வாறு கருதப்படுகிறது’ (ஸஅமூ) என்பது (போன்ற வார்த்தைகள்) தொடர்பாக வந்துள்ளவை.177

 உம்மு ஹானீ பின்த் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

‘மக்கா வெற்றி’ ஆண்டில் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருக்க, அவர்களை அவர்களின் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். ‘நான் உம்மு ஹானீ பின்த் அபீ தாலிப் (வந்திருக்கிறேன்)’ என்று பதிலளித்தேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உம்மு ஹானீயே வருக!’ எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் குளித்து முடித்தவுடன் ஒரே ஆடையை (தம் உடலில்) சுற்றிக் கொண்டவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். தொழுது முடித்ததும், ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர் (அலீ இப்னு அபீ தாலிப்) நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் இன்ன மகனைக் கொலை செய்யப்போவதாகக் கருதுகிறார்’ என்று கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உம்மு ஹானீயே! நீ அடைக்கலம் அளித்தவருக்கு நாங்களும் அடைக்கலம் அளித்துவிட்டோம்’ என்று கூறினார்கள்.

உம்மு ஹானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) ஆகும்.

Book : 78

(புகாரி: 6158)

بَابُ مَا جَاءَ فِي زَعَمُوا

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ

ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ» فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ» فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلًا قَدْ أَجَرْتُهُ، فُلاَنُ بْنُ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ» قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَاكَ ضُحًى





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.