தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6164

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக!’ என்றார்கள் அவர், ‘(அதற்கான வசதி) என்னிடம் இல்லையே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின், தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்பீராக!’ என்றார்கள். அவர் என்னால் இயலாது’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின், (அறுபது) ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்றார்கள். அவர் ‘(அதற்கான வசதி) என்னிடம் இல்லை’ என்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (15 ஸாஉ கொள்ளளவு பிடிக்கும் அளவையான) ‘அரக்’ ஒன்று கொண்டுவரப்பட்டது. (அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன.) (அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன) உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! என் குடும்பத்தார் அல்லாதோருக்கா (இதை நான் தர்மம் செய்ய)? என் உயிர் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! மதீனா எனும் கூடாரத்தின் இரண்டு மருங்கிலும் என்னை விடத் தேவையானோர் யாருமில்லை’ என்றார். (இதைக் கேட்ட) உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு ‘(இதோ) இதைப் பெற்றுக் கொள்வீராக!’ என்றார்கள்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில் ‘(‘வைஹக்க’ என்பதற்கு பதிலாக) ‘வைலக்க’ (உனக்குக் கேடுதான்) என்று காணப்படுகிறது.

Book :78

(புகாரி: 6164)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ، قَالَ: «وَيْحَكَ» قَالَ: وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً» قَالَ: مَا أَجِدُهَا، قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: مَا أَجِدُ، فَأُتِيَ بِعَرَقٍ، فَقَالَ: «خُذْهُ فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعَلَى غَيْرِ أَهْلِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا بَيْنَ طُنُبَيْ المَدِينَةِ أَحْوَجُ مِنِّي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، قَالَ: «خُذْهُ» تَابَعَهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ الزُّهْرِيِّ: «وَيْلَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.