அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு நாசம்தான் (வைஹக்க!) ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் இருக்கின்றது)’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டகத்துக்குரிய ஸகாத்தை நீ கொடுத்து வருகிறாயா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீ கடலுக்கு அப்பால் சென்று கூட வேலை செய்(து வாழலாம்.) அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்க) ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்’ என்றார்கள்.
Book :78
(புகாரி: 6165)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا الوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ أَعْرَابِيًّا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي عَنِ الهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ، إِنَّ شَأْنَ الهِجْرَةِ شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تُؤَدِّي صَدَقَتَهَا» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ البِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»
சமீப விமர்சனங்கள்