தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6175

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்கே உரிய பெருமைகளால் புகழ்ந்த பிறகு, ‘(மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்திருக்கிறார்கள். அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்கு நான் கூறுகிறேன்: அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றை கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்றார்கள்.196

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய) நான் கூறுகிறேன்:

(‘விலகிப்போ’ எனும் பொருள் கொண்ட ‘இக்ஸஃ’ எனும் சொல்லின் இறந்தகால வினைச் சொல்லான) ‘கஸஃத்துல் கல்ப’ எனும் சொல்லுக்கு ‘நாயை தூர விரட்டினேன்’ என்று பொருள். ‘காஸிஈன்’ என்பதற்கு ‘விரட்டப்பட்டவர்கள்’ என்று பொருள்.

Book :78

(புகாரி: 6175)

قَالَ سَالِمٌ: قَالَ عَبْدُ اللَّهِ

قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ، فَقَالَ: «إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” خَسَأْتُ الكَلْبَ: بَعَّدْتُهُ {خَاسِئِينَ} [البقرة: 65]: مُبْعَدِينَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.