தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6190

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 107 ‘அல்ஹஸ்க்ஷ்ன்’ (முரடு) எனும் பெயர்

 முஸய்யப் இப்னு ஹஸ்ணன்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை (ஹஸ்ணன் இப்னு அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பெயரென்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஹஸ்ணன்’ (முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(இல்லை) நீங்கள் (இனிமேல்) ‘ஸஹ்ல்’ (மென்மை)’ என்றார்கள். அவர், ‘என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்’ என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.

இதை ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book : 78

(புகாரி: 6190)

بَابُ اسْمِ الحَزْنِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ

أَنَّ أَبَاهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ» قَالَ: حَزْنٌ، قَالَ: «أَنْتَ سَهْلٌ» قَالَ: لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: «فَمَا زَالَتِ الحُزُونَةُ فِينَا بَعْدُ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، وَمَحْمُودٌ هُوَ ابْنُ غَيْلاَنَ، قَالاَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، بِهَذَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.