தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6204

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 113 ஒருவருக்கு வேறு குறிப்புப் பெயர் இருக்கவே ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயர் சூட்டுவது.

 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்களுக்கு ‘அபூ துராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயரே மிகவும் பிரியமானதாக இருந்தது. மேலும், அப்பெயர் சொல்லி தாம் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு ‘அபூ துராப்’ என்று நபி(ஸல்) அவர்களே பெயர் சூட்டினார்கள். (அப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டதற்கான காரணம்:) ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் (தம் துணைவியாரான) ஃபாத்திமா(ரலி) அவர்களின் மீது (ஏதோ காரணத்திற்காகக்) கோப்பட்டு வெளியேறிச் சென்று பள்ளிவாசலில் ஒரு சுவரில் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். அவர்களைத் (தேடியவாறு) பின்தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஒருவர், ‘அவர் இதோ பள்ளிவாசலில் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறார்’ என்று கூறினார். எனவே, அலீ(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். (படுத்திருந்தால்) அலீ(ரலி) அவர்களின் முதுகில் நிறைய மண் படிந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அலீயின் முதுகிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே ‘அபுதுராபே! (மண்ணின் தந்தையே! எழுந்து) அமருங்கள்’ என்று கூறினார்கள். 234

Book : 78

(புகாரி: 6204)

بَابُ التَّكَنِّي بِأَبِي تُرَابٍ، وَإِنْ كَانَتْ لَهُ كُنْيَةٌ أُخْرَى

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ

إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ، وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا، وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ، فَاضْطَجَعَ إِلَى الجِدَارِ إِلَى المَسْجِدِ، فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ، فَقَالَ: هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الجِدَارِ، فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ: «اجْلِسْ يَا أَبَا تُرَابٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.