பாடம் : 123 தும்மியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (லிஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருககு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)’ என்று பதிலளித்தார்கள்.
Book : 78
(புகாரி: 6221)بَابُ الحَمْدِ لِلْعَاطِسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «هَذَا حَمِدَ اللَّهَ، وَهَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ»
சமீப விமர்சனங்கள்