தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6255

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 பாவம் செய்த ஒருவன், பாவமன்னிப்புக் கோரி(திருந்தி)விட்டான் என்பது தெளிவாகும் வரை அவனுக்கு சலாம் சொல்லாமலும், அவனது சலாமுக்கு பதில் சொல்லாமலும் இருப்பது (சரியா?); ஒரு பாவி பாவமன்னிப்புக் கோரி(திருந்தி)விட்டான் என்பது எப்போது தெளிவாகும்?33 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், மது அருந்துவோருக்கு சலாம் சொல்லாதீர்கள் என்று கூறினார்கள்.34

 அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள் கூறினார்:

(என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது குறித்துக் கூறுகையில் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்.

எங்களிடம் (யாரும்) பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களுக்குத்) தடை விதித்துவிட்டார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்வேன். அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள் தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

இறுதியாக ஐம்பது நாள்கள் பூர்த்தியாயின. நபி(ஸல்) அவர்கள் (அன்றைய) பஜ்ருத் தொழுகையை முடித்தபோது எங்களின் பாவ மன்னிப்பு வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். 35

Book : 79

(புகாரி: 6255)

بَابُ مَنْ لَمْ يُسَلِّمْ عَلَى مَنِ اقْتَرَفَ ذَنْبًا، وَلَمْ يَرُدَّ سَلاَمَهُ، حَتَّى تَتَبَيَّنَ تَوْبَتُهُ، وَإِلَى مَتَى تَتَبَيَّنُ تَوْبَةُ العَاصِي

وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: «لاَ تُسَلِّمُوا عَلَى شَرَبَةِ الخَمْرِ»

حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ

سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ: ” يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ تَبُوكَ، وَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَلاَمِنَا، وَآتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُسَلِّمُ عَلَيْهِ، فَأَقُولُ فِي نَفْسِي: هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِرَدِّ السَّلاَمِ أَمْ لاَ؟ حَتَّى كَمَلَتْ خَمْسُونَ لَيْلَةً، وَآذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى الفَجْرَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.