தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6260

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 வேதக்காரர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?

 அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார். எனவே, அவரிடம் நாங்கள் சென்றோம். பிறகு, அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது அது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் ரோம பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிக் கொண்டது. அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நேர்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச் சாந்தி உண்டாகட்டும்.) பின்னர்…38

Book : 79

(புகாரி: 6260)

بَابٌ: كَيْفَ يُكْتَبُ الكِتَابُ إِلَى أَهْلِ الكِتَابِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ: أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ، أَخْبَرَهُ

أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ، وَكَانُوا تِجَارًا بِالشَّأْمِ، فَأَتَوْهُ – فَذَكَرَ الحَدِيثَ – قَالَ: ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُرِئَ، فَإِذَا فِيهِ: «بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، السَّلاَمُ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.