பாடம் : 30 (அழைப்பவருக்கு) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பது.50
முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்று முறை அழைத்துவிட்டு, ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயாக?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (எனக்குத் தெரியாது)’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வணங்கிடவேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைவைக்கக் கூடாது’ என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்று சொன்னேன். ‘அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்’ என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.51
Book : 79
(புகாரி: 6267)بَابُ مَنْ أَجَابَ بِلَبَّيْكَ وَسَعْدَيْكَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ مُعَاذٍ، قَالَ
أَنَا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، ثُمَّ قَالَ مِثْلَهُ ثَلاَثًا: «هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى العِبَادِ» قُلْتُ: لاَ، قَالَ: «حَقُّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا» ثُمَّ سَارَ سَاعَةً، فَقَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، قَالَ: ” هَلْ تَدْرِي مَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوا ذَلِكَ: أَنْ لاَ يُعَذِّبَهُمْ ” حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ مُعَاذٍ، بِهَذَا
சமீப விமர்சனங்கள்