தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6331

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தியுங்கள் எனும் (9:103ஆவது) இறைவசனமும்,ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும். அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.22

 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டுச சென்றோம். அப்போது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரரிடம்), ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களுக்குக் கேட்கச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். உடனே (கவிஞர்) ஆமிர்(ரலி) அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்’ என்று (தொடங்கும் பாடல்களைப்) பாடினார்கள்.

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் இஃதல்லாத மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டார்கள் ஆனால், நான் அதை மனனம் செய்யவில்லை.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘யார் இந்த ஒட்டகவோட்டி?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) மக்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?’ என்று கேட்டார். பிறகு மக்கள் அணிவகுத்து நின்று எதிரிகளுடன் போரிட்டனர். அப்போது தம் வாளின் மேற்பகுதியினாலேயே (முழங்காலில்) காயமேற்பட்டு ஆமிர்(ரலி) அவர்கள் இறந்தார்கள்.

(கைபர் வெற்றிகொள்ளப்பட்ட அன்று) மாலையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டியிருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைச் சமைப்பதற்காக’ என்று மக்கள் பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பாத்திரங்களில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! பாத்திரங்களில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவி(வைத்து)க் கொள்ளலாமா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியே ஆகட்டும்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 80

(புகாரி: 6331)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَصَلِّ عَلَيْهِمْ} [التوبة: 103] وَمَنْ خَصَّ أَخَاهُ بِالدُّعَاءِ دُونَ نَفْسِهِ

وَقَالَ أَبُو مُوسَى: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ، اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُ»

دَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ مَوْلَى سَلَمَةَ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ الأَكْوَعِ، قَالَ

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، قَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: أَيَا عَامِرُ لَوْ أَسْمَعْتَنَا مِنْ هُنَيْهَاتِكَ، فَنَزَلَ يَحْدُو بِهِمْ يُذَكِّرُ:
[البحر الرجز]
تَاللَّهِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا
وَذَكَرَ شِعْرًا غَيْرَ هَذَا، وَلَكِنِّي لَمْ أَحْفَظْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا السَّائِقُ» قَالُوا: عَامِرُ بْنُ الأَكْوَعِ، قَالَ: «يَرْحَمُهُ اللَّهُ» وَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: يَا رَسُولَ اللَّهِ، لَوْلاَ مَتَّعْتَنَا بِهِ، فَلَمَّا صَافَّ القَوْمَ قَاتَلُوهُمْ، فَأُصِيبَ عَامِرٌ بِقَائِمَةِ سَيْفِ نَفْسِهِ فَمَاتَ، فَلَمَّا أَمْسَوْا أَوْقَدُوا نَارًا كَثِيرَةً، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذِهِ النَّارُ، عَلَى أَيِّ شَيْءٍ تُوقِدُونَ» قَالُوا: عَلَى حُمُرٍ إِنْسِيَّةٍ، فَقَالَ: «أَهْرِيقُوا مَا فِيهَا وَكَسِّرُوهَا» قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نُهَرِيقُ مَا فِيهَا وَنَغْسِلُهَا؟ قَالَ: «أَوْ ذَاكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.