அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால், “இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம்.
என் தந்தை (அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள்) தமது ஸகாத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஅவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 80
(புகாரி: 6332)حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو هُوَ ابْنُ مُرَّةَ، سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةٍ قَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ» فَأَتَاهُ أَبِي فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»
சமீப விமர்சனங்கள்