தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-634

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா?

அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும் தலையைத்) திருப்பவேண்டுமா?

பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள் வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளில் வைக்க மாட்டார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லை எனக் கூறினார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்வதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (பார்க்க: முஸ்லிம்-608 )

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

பிலால் (ரலி) பாங்கு சொல்லும்போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தம் வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.
Book : 10

(புகாரி: 634)

بَابٌ: هَلْ يَتَتَبَّعُ المُؤَذِّنُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا، وَهَلْ يَلْتَفِتُ فِي الأَذَانِ

وَيُذْكَرُ عَنْ بِلاَلٍ: «أَنَّهُ جَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ»

وَكَانَ ابْنُ عُمَرَ: «لاَ يَجْعَلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ»

وَقَالَ إِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ»

وَقَالَ عَطَاءٌ: «الوُضُوءُ حَقٌّ وَسُنَّةٌ» وَقَالَتْ عَائِشَةُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ

«أَنَّهُ رَأَى بِلاَلًا يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَهُنَا بِالأَذَانِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.