பாடம் : 20 எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா?
இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள். மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை’ என்று கூறலாம் என்றார்கள்.
பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே,முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களுடைய கருத்தைவிட நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்
அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)’ என்று அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்’ என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10
بَابُ قَوْلِ الرَّجُلِ: فَاتَتْنَا الصَّلاَةُ
وَكَرِهَ ابْنُ سِيرِينَ أَنْ يَقُولَ: «فَاتَتْنَا الصَّلاَةُ، وَلَكِنْ لِيَقُلْ لَمْ نُدْرِكْ»
وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَحُّ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ
بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ: «مَا شَأْنُكُمْ؟» قَالُوا: اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ؟ قَالَ: «فَلاَ تَفْعَلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
சமீப விமர்சனங்கள்