பாடம் : 49 அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு ளதம் தோழருக்காக நபி (ஸல்) அவர்கள்ன பிரார்த்தித்தது.
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, ‘இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன்
கணவாயில் ஏறும்போது ஓதும் பிரார்த்தனை
Book : 80
(புகாரி: 6383)بَابُ الدُّعَاءِ عِنْدَ الوُضُوءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ، قَالَ
دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ بِهِ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ» وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ القِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ»
சமீப விமர்சனங்கள்