தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6386

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 மணமகனுக்காகப் பிரார்த்திப்பது

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் (ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது ‘விஷயம் என்ன?’ அல்லது ‘என்ன(இது)?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்’ என்று கூறினார்கள்.

Book : 80

(புகாரி: 6386)

بَابُ الدُّعَاءِ لِلْمُتَزَوِّجِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَهْيَمْ، أَوْ مَهْ» قَالَ: قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.