தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6392

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 (கொடுஞ் செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த்தனை. நபி (ஸல்) அவர்கள், இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்களைப் போன்று இவர்களுக்கும் ஏழு வருடங்களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக! என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை… எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75

 அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

(அகழ்ப் போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்து) எதிரணியினருக்கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது, ‘அல்லாஹும்ம முன்ஸிலல் கித்தாபி, சரீஅல் ஹிஸாபி, அஹ்ஸிமில் அஹ்ஸாப, அஹ்ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்’ என்று கூறினார்கள். (பொருள்: இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணகக்கு வாங்குபவனே! (சத்திய நெறியை வேரறுக்கப் பல குலங்களிலிருந்து ஒன்று திரண்டு வந்துள்ள) இந்த கூட்டத்தாரைத் தோற்கடிப்பாயாக! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!)

Book : 80

(புகாரி: 6392)

بَابُ الدُّعَاءِ عَلَى المُشْرِكِينَ

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» وَقَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ» وَقَالَ ابْنُ عُمَرَ: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا» حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]

حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الأَحْزَابِ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.