பாடம் : 62 யூதர்கள் விஷயத்தில் நாம் செய்யும் பிரார்த்தனை ஏற்கப்படும். எமது விஷயத்தில் அவர்கள் செய்யும் பிரார்த்தனை ஏற்கப் படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள், ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்தார்கள். உடனே, நான் (வேகப்பட்டவளாக) ‘அஸ்ஸாமு அலைக்கும், வ லஅனக்கமுல்லாஹு, வஃகளிப அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும். இறைவனின் சாபம் உங்களுக்கு ஏற்படட்டும். உங்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகட்டும்) என்று பதிலளித்தேன்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! நளினத்தைக் கடைப்பிடிப்பாயாக! ‘வன்மையாக நடந்து கொள்வதிலிருந்து’ அல்லது ‘அருவருப்பாகப் பேசுவதிலிருந்து’ உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் சொன்னதை தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நான் (பதில்) சொன்னதை நீ செவியுறவில்லையா?’ என்று (திருப்பி என்னிடம் கேட்டுவிட்டு), ‘அவர்களுக்கு நான் பதில் (முகமன்) கூறிவிட்டேன். அவர்களின் விஷயத்தில் நான் செய்த பிரார்த்தனை (இறைவனிடம்) அங்கீகரிக்கப்படும். என் விஷயத்தில் அவர்கள் புரிந்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது’ என்றார்கள்.83
Book : 80
(புகாரி: 6401)بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسْتَجَابُ لَنَا فِي اليَهُودِ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِينَا»
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ اليَهُودَ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكَ، قَالَ: «وَعَلَيْكُمْ» فَقَالَتْ عَائِشَةُ: السَّامُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالعُنْفَ، أَوِ الفُحْشَ» قَالَتْ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ، رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ»
சமீப விமர்சனங்கள்