தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6409

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறுவது.

 அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ஒரு ‘குன்றில்’ அல்லது ‘மேட்டில்’ ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, ‘(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை’ என்று கூறினார்கள். பிறகு, ‘அபூ மூஸா! அல்லது ‘அப்துல்லாஹ்!’ (என்று என்னைக் கூப்பிட்டு) ‘சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (அறிவித்துத்தாருங்கள்)’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்த வார்த்தை:) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)’ என்றார்கள்.86

Book : 80

(புகாரி: 6409)

بَابُ قَوْلِ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ

أَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَقَبَةٍ – أَوْ قَالَ: فِي ثَنِيَّةٍ – قَالَ: فَلَمَّا عَلاَ عَلَيْهَا رَجُلٌ نَادَى، فَرَفَعَ صَوْتَهُ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، قَالَ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ، قَالَ: «فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا» ثُمَّ قَالَ: ” يَا أَبَا مُوسَى – أَوْ: يَا عَبْدَ اللَّهِ – أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزِ الجَنَّةِ ” قُلْتُ: بَلَى، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.