தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6418

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு ‘(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் – ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது’ என்று கூறினார்கள்.

Book :81

(புகாரி: 6418)

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ

خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطُوطًا، فَقَالَ: «هَذَا الأَمَلُ وَهَذَا أَجَلُهُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ جَاءَهُ الخَطُّ الأَقْرَبُ»


Bukhari-Tamil-6418.
Bukhari-TamilMisc-6418.
Bukhari-Shamila-6418.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5966.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம்-அல்ஃபராஹீதி

3 . ஹம்மாம் பின் யஹ்யா-அல்அவ்தீ

4 . இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்-அல்அன்ஸாரி

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அபூஹம்ஸா


2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


மேலும் பார்க்க: புகாரி-6417.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.