தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6419

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

ஒருவர் அறுபது வயதை அடைந்து விட்டால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.12 ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: சிந்தித்து உணரக்கூடியவன் சிந்திப்பதற்கு வேண்டிய நீண்ட ஆயுளை உங்களுக்கு நாம் கொடுக்கவில்லையா? இன்னும் எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்துதானே இருந்தார்! (என்று அல்லாஹ் கேட்பான்). (35:37)

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

அத்தியாயம்: 81

(புகாரி: 6419)

بَابُ مَنْ بَلَغَ سِتِّينَ سَنَةً، فَقَدْ أَعْذَرَ اللَّهُ إِلَيْهِ فِي العُمُرِ

لِقَوْلِهِ: {أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ} [فاطر: 37]: «يَعْنِي الشَّيْبَ»

حَدَّثَنِي عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ، حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً»

تَابَعَهُ أَبُو حَازِمٍ، وَابْنُ عَجْلاَنَ، عَنِ المَقْبُرِيِّ


Bukhari-Tamil-6419.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6419.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.