பாடம் : 11 இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமை யானதுமாகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: பெண்கள், ஆண் மக்கள், பொன் மற்றும் வெள்ளியாலான பெருங்குவியல்கள், அடை யாளமிடப்பட்ட (உயர் ரகக்) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், வேளாண் நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆசைகொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. (உண்மையில்) இவை (யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்கள் ஆகும். (3:14) (இந்த வசனம் தொடர்பாக) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைவா! எங்களுக் காக எதை நீ அலங்கரித்துள்ளாயோ அதைக் கொண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. (ஆனால்,) இறைவா! இந்தச் செல்வங்களை அவற்றுக்குரிய வழியில் நான் செலவழிக்க (நீ அருள் புரிய) வேண்டுமென்று உன்னிடம் கோருகிறேன்.
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘இச்செல்வம்’ அல்லது ‘என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஹகீமே! இச்செல்வம்’ பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படும். மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்’ என்றார்கள்.30
Book : 81
(புகாரி: 6441)بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا المَالُ خَضِرَةٌ حُلْوَةٌ»
وَقَالَ اللَّهُ تَعَالَى: {زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ، وَالبَنِينَ وَالقَنَاطِيرِ المُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالفِضَّةِ، وَالخَيْلِ المُسَوَّمَةِ، وَالأَنْعَامِ وَالحَرْثِ، ذَلِكَ مَتَاعُ الحَيَاةِ الدُّنْيَا} [آل عمران: 14] قَالَ عُمَرُ: «اللَّهُمَّ إِنَّا لاَ نَسْتَطِيعُ إِلَّا أَنْ نَفْرَحَ بِمَا زَيَّنْتَهُ لَنَا، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ أُنْفِقَهُ فِي حَقِّهِ»
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ: أَخْبَرَنِي عُرْوَةُ، وَسَعِيدُ بْنُ المُسَيِّبِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ: «هَذَا المَالُ» – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: قَالَ لِي – «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَاليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى»
சமீப விமர்சனங்கள்