பாடம் : 39 நானும் மறுமை நாளும் இந்த (-சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. அல்லாஹ் கூறுகின்றான்: மறுமை (சம்பவிக்கும்) நிகழ்ச்சியானது, கண் இமைப்பதைப் போன்று, அல்லது (அதைவிடவும்) விரைவானது தான் . அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுள் ளவன். (16:77)
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். 92
Book : 82
(புகாரி: 6503)بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ»
{وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ البَصَرِ، أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} [النحل: 77]
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ هَكَذَا» وَيُشِيرُ بِإِصْبَعَيْهِ فَيَمُدُّ بِهِمَا
சமீப விமர்சனங்கள்