தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6529

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுமை நாளில் முதன் முதலில் அழைக்கப்படுபவர் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களாவார்கள். அப்போது அவர்கள் முன் அவர்களின் சந்ததிகள் இருப்பார்கள். சந்ததிகளிடம் ‘இவர் தாம் உங்கள் தந்தை ஆதம்’ என்று கூறப்படும். உடனே ஆதம் (அலை) அவர்கள் (இறைவனின் அழைப்பை ஏற்று, ‘இறைவா!) எத்தனை பேரை (அவ்வாறு) பிரிக்க வேண்டும்?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்று ஒன்பது பேரைத் தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

உடனே மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒவ்வொரு நூறு பேரிலும் தொண்ணூற்று ஒன்பது பேர் (நரகத்திற்கெனப் பிரித்து) எடுக்கப்பட்டால் எங்களில் (சொர்க்கத்திற்கென) யார்தான் மிஞ்சுவார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘மற்ற சமுதாயங்களுக்கிடையே என் சமுதாயத்தார் கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

Book :83

(புகாரி: 6529)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

أَوَّلُ مَنْ يُدْعَى يَوْمَ القِيَامَةِ آدَمُ، فَتَرَاءَى ذُرِّيَّتُهُ، فَيُقَالُ: هَذَا أَبُوكُمْ آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، فَيَقُولُ: أَخْرِجْ بَعْثَ جَهَنَّمَ مِنْ ذُرِّيَّتِكَ، فَيَقُولُ: يَا رَبِّ كَمْ أُخْرِجُ، فَيَقُولُ: أَخْرِجْ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةً وَتِسْعِينَ ” فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذَا أُخِذَ مِنَّا مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ، فَمَاذَا يَبْقَى مِنَّا؟ قَالَ: «إِنَّ أُمَّتِي فِي الأُمَمِ كَالشَّعَرَةِ البَيْضَاءِ فِي الثَّوْرِ الأَسْوَدِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.