தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6531

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 அல்லாஹ் கூறுகின்றான்: மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்நாளில் அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் (விசாரணைக்காக) நிற்பார்கள். (83:4-6) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களிடையே இருந்த தொடர்புகள் யாவும் (மறுமையில்) அறுந்து விடும் எனும் (2:166ஆவது) வசனத்திலுள்ள தொடர்புகள்’ என்பது, இம்மையிலுள்ள உறவுகளைக் குறிக்கும்.

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘அந்நாளில் அம்லத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் (விசாரணைக்காக) நிற்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) வசனம் தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் நிற்பார்’ என்று குறிப்பிட்டார்கள்.112

Book : 83

(புகாரி: 6531)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {أَلاَ يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ العَالَمِينَ} [المطففين: 5]

وَقَالَ ابْنُ عَبَّاسٍ : {وَتَقَطَّعَتْ بِهِمُ الأَسْبَابُ} [البقرة: 166] قَالَ: «الوُصُلاَتُ فِي الدُّنْيَا»

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

{يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ العَالَمِينَ} [المطففين: 6] قَالَ: «يَقُومُ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.