தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6536

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.

 (மறுமையில்) துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை செய்யப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ‘அல்லாஹ் (தன் வேதத்தில்) ‘வலக் கரத்தில் தம் வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (திருக்குர்ஆன் 84:08) என்றல்லவா கூறுகிறான்?’ எனக் கேட்டதற்கு, ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’118 என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 83

(புகாரி: 6536)

بَابٌ: مَنْ نُوقِشَ الحِسَابَ عُذِّبَ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ نُوقِشَ الحِسَابَ عُذِّبَ» قَالَتْ: قُلْتُ: أَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَ: «ذَلِكِ العَرْضُ»، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. وَتَابَعَهُ ابْنُ جُرَيْجٍ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمٍ، وَأَيُّوبُ، وَصَالِحُ بْنُ رُسْتُمَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.