பாடம் : 9
நாம் எந்த ஊர்காரர்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு)த் திரும்ப மாட்டார்கள் என்பது விதியாகி விட்டது. (21:95)
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப் பட்டது: (முன்னர்) இறைநம்பிக்கை கொண்ட வர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத் தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்; ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். (11:36)
நிச்சயமாக, நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் அடியார்களை அவர்கள் வழிகெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், இறைமறுப்பாளர்களையும் அன்றி (வேறெவரையும் குழந்தையாக) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள் என்று நூஹ் கூறினார். (71:27)
(21:95ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஹராமுன்’ எனும் சொல் ஹிர்முன்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. அந்த) ஹிர்ம்’ என்பதற்கு அபிசீனிய மொழியில் உறுதியாகிவிட்டது’ என்று பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.21
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறுபாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.22
Book : 82
(புகாரி: 6612)بَابُ {وَحَرَامٌ عَلَى قَرْيَةٍ أَهْلَكْنَاهَا أَنَّهُمْ لاَ يَرْجِعُونَ} [الأنبياء: 95]
{أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ} [هود: 36] {وَلاَ يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا} [نوح: 27] وَقَالَ مَنْصُورُ بْنُ النُّعْمَانِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «(وَحِرْمٌ) بِالحَبَشِيَّةِ وَجَبَ»
حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ، مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ»
وَقَالَ شَبَابَةُ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்