தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6619

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

அல்லாஹ் எழுதியதைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை ஒரு போதும் அணுகாது என்று (நபியே!) நீர் கூறுக (எனும் 9:51ஆவது இறைவசனம்).

அல்லாஹ் எழுதியது’ என்பது விதியைக் குறிக்கும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (37:162ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பி ஃபாத்தினீன்’ எனும் சொல்லுக்கு அல்லாஹ் யாரை நரகத்தில் நுழைவார்கள் என்று எழுதிவிட்டானோ அவர்களைத் தவிர வேறெவரையும் நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது என்று பொருள்.

(87:3ஆவது வசனத்திலுள்ள) அவனே விதியை நிர்ணயித்தான். வழியையும் காட்டினான் என்பதற்கு மனிதர்களின் நற்கதியையும் துர்பாக்கியத்தையும் விதியாக்கினான். கால்நடைகளுக்கு அவற்றின் மேய்ச்சல் நிலங்களைக் காட்டினான் என்று பொருள்.

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அதற்கவர்கள் ‘அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாக இருந்தது. பிறகு அதை இறைநம்பிக்கையாளர்களுக்க அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, அந்த நோய் (பரவி) உள்ள ஓர் ஊரில் ஓர் அடியார், தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகப் பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் அந்த ஊரிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தால் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் கிடைக்கும்’ என்று பதிலளித்தார்கள்.29

Book : 82

(புகாரி: 6619)

بَابُ {قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا} [التوبة: 51]: قَضَى
قَالَ مُجَاهِدٌ: {بِفَاتِنِينَ} [الصافات: 162]: ” بِمُضِلِّينَ إِلَّا مَنْ كَتَبَ اللَّهُ أَنَّهُ يَصْلَى الجَحِيمَ {قَدَّرَ فَهَدَى} [الأعلى: 3]
[ص:127]: «قَدَّرَ الشَّقَاءَ وَالسَّعَادَةَ، وَهَدَى الأَنْعَامَ لِمَرَاتِعِهَا»

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، أَخْبَرَنَا النَّضْرُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ:

أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَقَالَ: «كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، مَا مِنْ عَبْدٍ يَكُونُ فِي بَلَدٍ يَكُونُ فِيهِ، وَيَمْكُثُ فِيهِ لاَ يَخْرُجُ مِنَ البَلَدِ، صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.