பாடம் : 13
அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக’ என்று ஒரு மனிதர் சொல்வது.52
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (15:72ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ல அம்ருக’எனும் சொல்லுக்கு உமது வாழ்நாள் மீதாணையாக! என்று பொருள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்:
உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ் அலைஹிம்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன்.
அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்த சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது:) அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் இப்னு ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்’ என்று கூறினார்கள்.
Book : 83
(புகாரி: 6662)بَابُ قَوْلِ الرَّجُلِ: لَعَمْرُ اللَّهِ
قَالَ ابْنُ عَبَّاسٍ: {لَعَمْرُكَ} [الحجر: ٧٢]: «لَعَيْشُكَ»
حَدَّثَنَا الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ المُسَيِّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ، – وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ وَفِيهِ – «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ» فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ: لَعَمْرُ اللَّهِ لَنَقْتُلَنَّهُ
சமீப விமர்சனங்கள்