பாடம் : 16
பொய்ச் சத்தியம்67
நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கிவிடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிலைபெற்ற பின் (உங்களது) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தை அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (16:94)
(இவ்சனத்தின் மூலத்திலுள்ள) தகல்’ (துரோகம்) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.
Book : 83
(புகாரி: 6675)بَابُ اليَمِينِ الغَمُوسِ
{وَلاَ تَتَّخِذُوا أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ، فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوتِهَا، وَتَذُوقُوا السُّوءَ بِمَا صَدَدْتُمْ عَنْ سَبِيلِ اللَّهِ، وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ} [النحل: 94] ” دَخَلًا: مَكْرًا وَخِيَانَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ
சமீப விமர்சனங்கள்