பாடம் : 17
அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வதற்கும், மக்களிடையே சமாதானம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை(க் கருவி) ஆக்கி விட வேண்டாம். அல்லாஹ் மிகச் செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அது தான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95)
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (16:91)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்’ என்று கூறினார்கள்.
அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ், ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான். 68
Book : 83
(புகாரி: 6676)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا، أُولَئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ، وَلاَ يُكَلِّمُهُمُ اللَّهُ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]
وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {وَلاَ تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِأَيْمَانِكُمْ أَنْ تَبَرُّوا وَتَتَّقُوا، وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ، وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ} [البقرة: 224] وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {وَلاَ تَشْتَرُوا بِعَهْدِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا، إِنَّمَا عِنْدَ اللَّهِ هُوَ خَيْرٌ لَكُمْ، إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ} [النحل: 95] {وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ، وَلاَ تَنْقُضُوا الأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا، وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا} [النحل: 91]
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ
சமீப விமர்சனங்கள்