தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6677

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பின்னர் அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்து, ‘அபூ அப்திர்ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?’ என்று கேட்டார்கள். ‘இப்படி இப்படி’ என மக்கள் கூறினார்கள்.

அப்போது அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) கூறினார்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் ‘(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம்’ என்று கூறினார்கள். (உடனே) நான் ‘அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக் கொள்வதற்காக பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்’ என்று கூறினார்கள்.69

Book :83

(புகாரி: 6677)

فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ، فَقَالَ: مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ؟ فَقَالُوا: كَذَا وَكَذَا، قَالَ: فِيَّ أُنْزِلَتْ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ» قُلْتُ: إِذًا يَحْلِفُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، وَهُوَ فِيهَا فَاجِرٌ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ يَوْمَ القِيَامَةِ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.