பாடம் : 19
ஒருவர் அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது சுப்ஹானல்லாஹ்’ என்றார்; அல்லது அல்லாஹு அக்பர்’ என்று சொன்னார்; அல்லது அல்ஹம்து லில்லாஹ்’ என்றார்; அல்லது லாயிலாஹ இல்லல்லாஹ்’என்று சொன்னார் என்றால், அவர் எண்ணப் படியே அமையும்.74
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது நான்காகும்: 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்.) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை.) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்.)
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸிற்கு எழுதிய கடிதத்தில், (வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள் என்று எழுதினார்கள்.75
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்பதாகும்.76
முஸய்யப் இப்னு ஹஸ்ன் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது அவரிடம் வந்து, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்றார்கள்.77
Book : 83
(புகாரி: 6681)بَابُ إِذَا قَالَ: وَاللَّهِ لَا أَتَكَلَّمُ اليَوْمَ، فَصَلَّى، أَوْ قَرَأَ، أَوْ سَبَّحَ، أَوْ كَبَّرَ، أَوْ حَمِدَ، أَوْ هَلَّلَ، فَهُوَ عَلَى نِيَّتِهِ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَفْضَلُ الكَلَامِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ” قَالَ أَبُو سُفْيَانَ: كَتَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هِرَقْلَ: {تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ} [آل عمران: ٦٤] وَقَالَ مُجَاهِدٌ: {كَلِمَةُ التَّقْوَى} [الفتح: ٢٦]: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ»
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، قَالَ:
لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ، جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ»
சமீப விமர்சனங்கள்