தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6711

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

(சத்திய முறிவுக்கான) பரிகாரத்திற்காகப் பத்து ஏழைகளுக்கு (உணவு) அளிக்கும் போது அவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ தூரத்து உறவினர்களாகவோ இருக்கலாம்.

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்துவிட்டேன்!’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்யும் வசதியைப் பெற்றுள்ளீரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘என்னால் இயலாது’ என்றார்.

பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேழீச்சம் பழம் உள்ள கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இதை எடுத்துச் சென்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர். ‘என்னை விட ஏழையாக இருக்போருக்கா (நான் தர்மம் செய்யவேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களை விடப் பரம ஏழைகள் யாருமில்லை’ என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இதை எடுத்துச் சென்று உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!’ என்றார்கள்.

Book : 86

(புகாரி: 6711)

بَابُ يُعْطِي فِي الكَفَّارَةِ عَشَرَةَ مَسَاكِينَ، قَرِيبًا كَانَ أَوْ بَعِيدًا

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ، قَالَ: «وَمَا شَأْنُكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، قَالَ: «هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ أَجِدُ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا؟ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَفْقَرُ مِنَّا، ثُمَّ قَالَ: «خُذْهُ فَأَطْعِمْهُ أَهْلَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.