தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6716

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

முதப்பர்’ (பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமை), உம்முல் வலத்’ (எசமானின் குழந்தைக்குத் தாயான அடிமைப் பெண்), முகாதப்’ (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஆகியோரை பரிகாரத் திற்காக விடுதலை செய்வதும் விபசாரத்தில் பிறந்த (அடிமைக்) குழந்தையை விடுதலை செய்வதும்.

தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முதப்பர், உம்முல் வலத் ஆகியோரை (பரிகாரத்திற்காக) விடுதலை செய்வது செல்லும்.13

 ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி( ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ‘என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‘அவன் (எகிப்து நாட்டு) கிப்தீ அடிமையாவான். அவன் (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டான்’ என்றும் கூறக் கேட்டேன்.14

Book : 86

(புகாரி: 6716)

بَابُ عِتْقِ المُدَبَّرِ وَأُمِّ الوَلَدِ وَالمُكَاتَبِ فِي الكَفَّارَةِ، وَعِتْقِ وَلَدِ الزِّنَا
وَقَالَ طَاوُسٌ: «يُجْزِئُ المُدَبَّرُ وَأُمُّ الوَلَدِ»

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ،

أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا لَهُ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي» فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ فَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: عَبْدًا قِبْطِيًّا، مَاتَ عَامَ أَوَّلَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.