பாடம் : 6
புதல்வியருக்கு(ப் பெற்றோரிடமிருந்து) கிடைக்கும் சொத்துரிமை.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, என்னுடைய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். ‘அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்றார்கள். ‘அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். ‘மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?)’ என்று கேட்டேன். நபியவர்கள், ‘மூன்றிலொரு பங்கு கூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாகவிட்டுச் செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கிற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு)’ என்றார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா செல்வார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் (மதீனா) சென்ற பிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் அந்தஸ்தும் அதிகமாகவே செய்யும். நான் (மதீனா) சென்ற பிறகு, உங்களின் மூலம் சிலர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், ஸஅத் இப்னு கவ்லா! (அவரின் ஆசை நிறைவேறவில்லை)’ என்று மக்காவிலேயே இறந்துவிட்ட ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுதபாம் தெரிவித்தார்கள்.
இதன் அறிவிப்பார்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்கள் ஆமிர் இப்னு லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14
Book : 86
(புகாரி: 6733)بَابُ مِيرَاثِ البَنَاتِ
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
مَرِضْتُ بِمَكَّةَ مَرَضًا، فَأَشْفَيْتُ [ص:151] مِنْهُ عَلَى المَوْتِ، فَأَتَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مَالًا كَثِيرًا، وَلَيْسَ يَرِثُنِي إِلَّا ابْنَتِي، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لاَ» قَالَ: قُلْتُ: فَالشَّطْرُ؟ قَالَ: «لاَ» قُلْتُ: الثُّلُثُ؟ قَالَ: «الثُّلُثُ كَبِيرٌ، إِنَّكَ إِنْ تَرَكْتَ وَلَدَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَتْرُكَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، آأُخَلَّفُ عَنْ هِجْرَتِي؟ فَقَالَ: «لَنْ تُخَلَّفَ بَعْدِي، فَتَعْمَلَ عَمَلًا تُرِيدُ بِهِ وَجْهَ اللَّهِ، إِلَّا ازْدَدْتَ بِهِ رِفْعَةً وَدَرَجَةً، وَلَعَلَّ أَنْ تُخَلَّفَ بَعْدِي حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، لَكِنِ البَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ» يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَاتَ بِمَكَّةَ،
قَالَ سُفْيَانُ: «وَسَعْدُ ابْنُ خَوْلَةَ رَجُلٌ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ»
சமீப விமர்சனங்கள்