ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு இறந்த ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள்.
Book :86
(புகாரி: 6734)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ شَيْبَانُ، عَنْ أَشْعَثَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ:
أَتَانَا مُعَاذُ بْنُ جَبَلٍ، بِاليَمَنِ مُعَلِّمًا وَأَمِيرًا، ” فَسَأَلْنَاهُ عَنْ رَجُلٍ: تُوُفِّيَ وَتَرَكَ ابْنَتَهُ وَأُخْتَهُ، فَأَعْطَى الِابْنَةَ النِّصْفَ وَالأُخْتَ النِّصْفَ
சமீப விமர்சனங்கள்