பாடம் : 7
(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாத போது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இறந்தவருக்கு) ஆண் மக்கள் (உயிருடன்) இல்லாத போது, அவர்களுடைய குழந்தைகள் (பேரன்கள்,சொந்தக்) குழந்தைகளின் அந்தஸ்தைப் பெறுவர். பேரக் குழந்தைகளில் (-மகனுடைய மக்களில்) ஆண்கள் சொந்த ஆண் மக்களைப் போன்றும், அவர்களில் பெண்கள் சொந்த பெண் மக்களைப் போன்றும் ஆவர். அவர்கள் வாரிசுரிமை பெறுவதைப் போன்றே இவர்களும் வாரிசுரிமை பெறுவார்கள். அவர்கள் (இருக்கும் போது மற்ற வாரிசுகளில் யார் யாரை வாரிசுரிமை பெறாமல்) தடுப்பார்களோ (அவர்களை யெல்லாம்) இவர்களும் தடுப்பார்கள். மகன் (உயிருடன்) இருக்கும் போது மகனுடைய மக்கள் வாரிசுரிமை பெற மாட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 86
(புகாரி: 6735)بَابُ مِيرَاثِ ابْنِ الِابْنِ إِذَا لَمْ يَكُنِ ابْنٌ
وَقَالَ زَيْدٌ: «وَلَدُ الأَبْنَاءِ بِمَنْزِلَةِ الوَلَدِ، إِذَا لَمْ يَكُنْ دُونَهُمْ وَلَدٌ ذَكَرُهُمْ كَذَكَرِهِمْ، وَأُنْثَاهُمْ كَأُنْثَاهُمْ، يَرِثُونَ كَمَا يَرِثُونَ، وَيَحْجُبُونَ كَمَا يَحْجُبُونَ، وَلاَ يَرِثُ وَلَدُ الِابْنِ مَعَ الِابْنِ»
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَلْحِقُوا الفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ»
சமீப விமர்சனங்கள்